பரீட்சை அனுமதி அட்டைகள்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளைமறுதினம்(23) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரவுத் தளத்திற்குள் பிரவேசித்து பாடசாலை அதிபர்கள் பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை,பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டை அல்லது அனுமதி அட்டை இல்லாவிட்டாலும் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேரசூசியும் வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.