சிவனை வேண்டி விரதங்களில் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று மஹா சிவராத்திரி. இந்த விரதமானது மாசிமாதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில், இந்த வருடம் மஹா சிவராத்திரி 18.2.2023 ஆம் திகதி சனிக்கிழமை வரவிருக்கின்றது.
சிவராத்திரி விரதமன்று உறங்காமல் சிவனை வழிபட்டு விரதத்தை முடிப்பது மிக நன்று இருப்பினும் சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற எந்த மந்திரத்தை உச்சரிப்பது என்ற ஆன்மீகம் சார்ந்த பல தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், அதிகாலை வேலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்து குளித்து விட வேண்டும்.
18ம் திகதி அதிகாலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானின் திருவுருவப்படம் அல்லது லிங்கம் இருந்தால் அதற்கு முறையான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
18ஆம் திகதி காலை முதல் விரதத்தை தொடங்கி விட்டீர்கள். 18ம் திகதி இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் 19ம் திகதி காலை தான், உணவு சாப்பிட்டு உங்களுடைய விரோதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
19ஆம் திகதி அன்றும் காலை தூங்கக் கூடாது. 19ஆம் திகதி மாலை 6 மணிக்கு, சிவபெருமானின் தரிசனம் செய்துவிட்டு விரதத்தை நல்லபடியாக முடித்ததற்கு சிவபெருமானிடம் நன்றி தெரிவித்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்ல வேண்டும்.
இதுதான் முழுமையான சிவராத்திரி விரதம் இருக்கும் முறை.
சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது? எல்லோருக்கும் உடல்நிலை விரதம் இருக்கவும், கண்விழிக்கவும் ஒத்துழைக்காது அல்லவா. ஆகவே உடல்நிலை சரியில்லாதவர்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.
மனதார சிவராத்திரி அன்று 1 மணி நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சவுகரியம் 18ம் தேதி காலை 6 மணியிலிருந்து உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது 1 மணி நேரம் எம்பெருமானுக்காக ஒதுக்கி, ஒரு இடத்தில் அமர்ந்து ‘சிவசிவ’ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.
எத்தனை முறை மந்திரத்தை உச்சரிப்பது என்ற கணக்கு வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு மணி நேரம் இறைவனுக்காக இந்த நாமத்தை சொன்னாலே போதும்.
சிவராத்திரி அன்று விரதம் இருந்த முழு பலனை நீங்கள் அடைந்து விடுவீர்கள். அதேபோல சிவராத்திரியில் மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானை தரிசனம் செய்வது மிக மிக சிறப்பு.
18ம் திகதி நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு சிவ ஆலயங்களில் மூன்றாம் கால பூஜை நடைபெறும். அதில் கலந்து கொண்டு உங்கள் கையால் சிவபெருமானுக்கு வில்வ இலையை சாற்றுவது மிக மிக அற்புதமான பலன்களை கொடுக்கும்.
நீங்கள் வேண்டிய வரத்தை இந்த நேரத்தில் கேட்டால் அது உடனடியாக நிறைவேறும். சிவபெருமான் மனம் குளிர்ந்து வரங்களை அளிக்கக்கூடிய மிக சிறப்பு வாய்ந்த நேரம் இது. காரணம் இந்த மூன்றாம் கால பூஜையில் தான் பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.