head


யாழ் பல்கலைக்கழகத்தில் தலையெடுத்துள்ள பாலியல் லஞ்சம் ..?

|2023-02-19 11:42:19|Crime| Page Views: 348

அண்மையில் தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றில் வெளியான இச்செய்தியானது தற்போது மாணவர்கள்,பெற்றோர்கள்,கல்விமான்கள், கல்வித்துறை அதிகாரிகள் என அனைவர் மத்தியிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமும் அது பற்றி கொஞ்சம் தேடி ஆராய்ந்து கலந்துரையாடியதில் இவ்விடயம் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வரும் தமிழ் ,முஸ்லிம், சிங்கள மாணவிகள் பாலியல் லஞ்சம் நோக்கி தள்ளப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சியடைய முடியாது என்று நிர்பந்திக்கப்படுவதாக தெரியவந்துள்ளதுள்ளது.இதன் காரணமாக மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல பயப்படுவதாகவும் கூறப்படுகின்றது. வெளியில் சொல்லாமல் இருக்க அவர்கள் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இது வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்ட போதிலும் தற்போது இது பலரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது புதிதல்ல கடந்த காலங்களிலும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் தங்கள் கல்வி நடவடிக்கைகளில் பிரச்சினை ஏற்படலாம்என பயந்து இக்குற்ற செயல்கள் பற்றி வெளியில் சொல்லவதில்லை. பெற்றோர்களே சற்று பிள்ளைகள் மீது அவதானம் செலுத்துங்கள்.கல்விக்கு அப்பால் அவர்களின் பாதுகாப்பும் சந்தோஷமும் முக்கியமானது என்பதை மனதில் பதியுங்கள்..!



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.