head


இலங்கையை வீழ்த்தியதற்காக நன்றி தெரிவித்த இந்திய பயிற்சியாளர்!

|2023-03-15 10:57:48|General| Page Views: 155

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியா பிரவேசிப்பதற்கு உதவிய நியூசிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் நன்றியை தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியதற்கு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நியூஷிலாந்து அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தப்போட்டியில் நியூசிலாந்து இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வருவதற்கான இலங்கையின் நம்பிக்கையை தகர்த்தது.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் என்பது இரண்டு வருட நீண்ட நிகழ்வு, அனைத்து அணிகளும் தலா ஆறு டெஸ்ட் தொடர்களை விளையாடுகின்றன. எனவே மற்ற அணிகளை சார்ந்து இருப்பது இயற்கையானது.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளரின் கருத்து இலங்கை அணி இந்தப்போட்டியில் வெல்லாது என்று தாம் ஆவலுடன் பார்த்துக் கொண்டிந்ததாக இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் குறிப்பிட்டுள்ளார்.

அணிகள் சிறப்பாக விளையாடவேண்டும் எனினும் இது போன்ற போட்டிகளில் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலை உள்ளது. மற்றும் நியூசிலாந்து அணி போட்டியை சமநிலையில் முடிக்காமல் வெற்றி பெறவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டதாகவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கிடையேயான உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது இந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.