டுவிட்டர் தொடர்பில் எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பிய இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்
|2023-03-16 09:32:49|General|
Page Views: 50
சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆவுஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. தொடர் நாயகனாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர்.
அஸ்வின் கிரிக்கெட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தமது டுவிட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, 'எனது டுவிட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19ஆம் திகதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நிறைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.