head


சம்பியன்ஸ் லீக்: மன்செஸ்டர் சிட்டி, ரியல் மெட்ரிட்- நபோலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

|2023-03-16 11:51:55|General| Page Views: 49

உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், ரவுண்ட்-16 இரண்டாவது லெக்கின் நான்கு முக்கிய போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இதன்படி, கடந்த இரண்டு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிட்டி, ரியல் மெட்ரிட் மற்றும் நபோலி அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ரவுண்ட்-16 இரண்டாவது லெக்கில் நடைபெற்ற போட்டியில், மன்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்.பி. லெய்ப்ஸிங் அணிகள் மோதின. இப்போட்டியில், மன்செஸ்டர் சிட்டி அணி, 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், 8-1 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் சிட்டி அணி, வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

இதேபோல போர்ட்டோ மற்றும் இன்டர் மிலான் அணிகள் மோதிய போட்டி, கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் முடிவடைந்தது.

ஆனால் ஓட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், இன்டர் மிலான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

ரவுண்ட்-16 இரண்டாவது லெக்கில் நடைபெற்ற போட்டியில், ரியல் மெட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனடிப்படையில் ரியல் மெட்ரிட் அணி, ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 6-2 என்ற கோல்கணக்கில் முன்னிலைப்பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

நபோலி மற்றும் பிராங்பர்ட் அணிகள் மோதிய போட்டியில், நபோலி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், நபோலி அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப்பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதிப் போட்டிகளுக்கான அணிகளின் குழு தேர்வு, நாளை, இடம்பெறவுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.