வைத்தியசாலையில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
|2023-03-18 10:18:12|Crime|
Page Views: 39
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்து
கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ரங்காவின் மெய்ப்பாதுகாவலராக செயற்ப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார். இது தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன், ரங்கா உட்பட குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு சம்பவத்தில் ஸ்ரீரங்கா கைதாகியுள்ளார்.
ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அவரது கைது இடம்பெற்றுள்ளது
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.