head


புடினுக்கு எதிரான பிடியாணை உத்தரவு! ஜெலென்ஸ்கி பாராட்டு

|2023-03-18 10:29:35|Political| Page Views: 111

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியானை உத்தரவு பிறப்பித்து இருப்பது ”வரலாற்று தீர்ப்பு” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ”வரலாற்று தீர்மானம், இதில் இருந்து வரலாற்று பொறுப்பு தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

போர் குற்றங்கள் உக்ரைன் போரில் ரஷ்யா வேண்டுமென்றே கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை செய்து வருவதாக ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்த அறிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டி, புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்திய போர் குற்றத்திற்கும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்ய கூட்டமைப்பிற்கு குழந்தைகளை மாற்றியதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதே போல ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையரான மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்யவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.