head


ஆப்பிரிக்காவை சூறையாடிய சூறாவளி!

|2023-03-18 10:36:53|Natural Disaster| Page Views: 40

ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என்றும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி , பிரெட்டி பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் மாயம் மேலும், புயல் நிலைமை காரணமாக தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், நிலைமை மோசமடைந்துள்ளதாகவும்,பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், சாலைகள் மற்றும் பாலங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.