head


இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தமிழரொருவர் பலி!

|2023-03-18 10:42:01|General| Page Views: 41

இந்திய இராணுவத்தின் சீட்டா ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி என்றும், மேஜர் ஜெயந்த் என்றும் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த இராணுவ வீரர்களில் ஒருவர் தமிழர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும், இன்று அவரது உடல் ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.