அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை நிலைப்பாடு: ஓ.எஸ்.மணியன், நாராயணன் திருப்பதி கருத்து
|2023-03-18 11:33:46|Political|
Page Views: 40
தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை - அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (மார்ச் 17) நடந்தது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.
தற்போது, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டிய சூழல் இருப்பதால், தமிழகத்துக்கு அவ்வப்போது வர முடியாது என்றும், முக்கியமான கட்சி கூட்டமாக இருந்தால் மட்டுமே இங்கு வந்து பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் அண்ணாமலை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், பாஜக நிர்வாகிகள் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது, கர்நாடக மாநில தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, மே மாதம் 10-ம் தேதி ஒரு முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை கூட்டத்தில் தெரிவித்ததாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.