யாழில் 10 ஆண்டு நிறைவை கொண்டாடிய வன்முறைக் கும்பல் !

user 04-Jan-2025 இலங்கை 778 Views

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காணொளியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் நவாலி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே மானிப்பாய் பொலிஸாரினால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை கடந்த்த காலங்களில் யாழில் வன்முறை கும்பல்களால் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Related Post

பிரபலமான செய்தி