யாழில் குடியிருப்புக்கு நடுவே கோழிப்பண்ணை பாதிக்கப்படும் மக்கள்

user 08-Mar-2026 இலங்கை 94 Views

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் தெற்கு சத்தியபுரம் பிரதேசத்தின் கறுத்தான் வடலி குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கோழிப்பண்ணையால் அதனைச் சூழவுள்ள பொதுமக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, ஜே - 182 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் ஒருவர் காணியை வாங்கி 2024 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.

குறித்த பண்ணை அமைக்கும் போதே கிராம மக்கள் சந்தேகமடைந்து குறித்த காணி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மேலே சூரிய மின்கல படலம் அமைத்து பெண்களுக்கு சுயதொழில் முயற்சி வாய்ப்பு வழங்கப்போவதாக கூறியிருந்தார். பின் கூறியதற்கு மாறாக கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.

கோழிப்பண்ணை அமைத்த பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றம், ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், இலையான் பெருகுவதால் ஏற்படும் தொற்றுகள் என பெரும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி