அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு !

user 10-Jan-2025 இலங்கை 837 Views

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது.

 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த டிசம்பர் 04ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10ஆம் திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

இதனடிப்படையில் தற்போதைக்கு 1 லட்சத்து 27 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத அரிசி கொள்கலன்களை இன்றைய தினத்துக்குள் பரிசோதனைக்கு உட்படுத்தி, துறைமுகத்தில் இருந்து விடுவிக்க உள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பிறகு இறக்குமதி செய்யப்படும் அரிசி, மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  

Related Post

பிரபலமான செய்தி