நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது !

user 29-Jan-2025 இலங்கை 171 Views

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு  இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும்,  மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  தெரிவித்துள்ளார். 

 

Related Post

பிரபலமான செய்தி