சர்ச்சையை கிளப்பிய வாகன இறக்குமதிக்கான புதிய விதி !

user 03-Feb-2025 இலங்கை 384 Views

வாகன இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பில் அண்மையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதியை சுட்டிக்காட்டி வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

குறித்த விதியானது, இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திகதிக்கு மூன்று ஆண்டுகள் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இருப்பினும், உற்பத்தியாளர்கள் பொதுவாக உற்பத்தி ஆண்டை மாத்திரமே குறிப்பிடும் அதேவேளை அவர்கள் உற்பத்தி செய்த சரியான திகதியைக் குறிப்பிடுவதில்லை எனவே, இது இறக்குமதி செய்யப்படும் போதான பேச்சுவார்த்தையை கடினமாக்குவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குறித்த விதியில் திருத்தம் மேற்கொள்ளுமாறு  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி