கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் சகோதரருக்குக் கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனுஷ்கவின் மனைவி தர்ஷனி அவர்களது பிள்ளைகளான இனுக்க அஸ்வினி, 3வயதான ரனாயா, 2 வயதான கெல்லி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் காமினி அமரகோன் ஆகியோர் ஒட்டாவாவில் உள்ள அவர்களது இல்லத்திலேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் தனுஷ்க விக்ரமசிங்க மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தநிலையில், இந்த கொலைகளை செய்த ஃபெப்ரியோ டி-சொய்சாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 25 ஆண்டுகள் விடுமுறை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, குடும்பத்தை இழந்த தனுஷ்கவுக்குத் துணையாக இருப்பதற்காக அவரது தந்தை மற்றும் சகோதரர் கனடாவுக்கு சென்றனர்.
அத்துடன், கனடாவில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த மாத தொடக்கத்தில் அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.