முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 127ஆவது பிறந்தநாள் நினைவு தினம் இன்று

user 08-Jan-2026 இலங்கை 24 Views

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும், மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 127ஆவது பிறந்தநாள் நினைவு தினம் இன்று (08), முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவுத்தூபி அருகே நடைபெற்றதுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட குழுவினரும் மறைந்த தலைவரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

இந்நினைவு தின நிகழ்வு, கட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தையும், மறைந்த தலைவர் நாட்டுக்குச் செய்த சேவைகளையும் நினைவுகூரும் வகையில் அமைந்திருந்தது.

Related Post

பிரபலமான செய்தி