Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

தமிழகத்தில் மீண்டும் பால், தயிர் விலை உயர்வு; நுகர்வோர் அதிருப்தி

27 Jul 2026, 09:47 AM
பார்வைகள்: 252
தமிழகத்தில் மீண்டும் பால், தயிர் விலை உயர்வு; நுகர்வோர் அதிருப்தி

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதால், நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு, பால் கொள்முதல் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்திச் செலவும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ச்சியான விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருளான பால் மற்றும் தயிரின் விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.