Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

திரையுலகில் சோகம்: பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

05 Aug 2026, 11:03 AM
பார்வைகள்: 201
திரையுலகில் சோகம்: பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற பிரபல நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.

தமிழில் நடிகர் சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், தனது வலுவான நடிப்பால் பல வெற்றிப் படங்களில் தனித்துவமான முத்திரையைப் பதித்திருந்தார்.

74 வயதில் பிரதீப் ராவத் மறைந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப்படப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.