Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

ஸ்வீடன் அணியின் அதிரடி ஆட்டம்: துனிசியாவை 5-1 கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி!

15 Jun 2026, 12:16 PM
பார்வைகள்: 1,109
ஸ்வீடன் அணியின் அதிரடி ஆட்டம்: துனிசியாவை 5-1 கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி!

மொன்டெர்ரி: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியுடன் ஸ்வீடன் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.ஆட்டம் தொடங்கிய முதலே ஸ்வீடன் அணி தாக்குதல் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 7வது நிமிடத்தில் யாசின் அயாரு முதல் கோலை பதிவு செய்து அணியை முன்னிலையில் வைத்தார். தொடர்ந்து 32வது நிமிடத்தில் அலெக்சாண்டர் இஷாக் கோல் அடித்து முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். முதல் பாதியின் இறுதியில் துனிசியாவின் கரீம் ரெகிக் ஒரு கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

இரண்டாம் பாதியில் ஸ்வீடன் மீண்டும் வலுவான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துனிசியாவின் தவறை பயன்படுத்தி விக்டர் கியோகெரஸ் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 3-1 ஆனது. 84வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய மேட்டியாஸ் ஸ்வான்பெர்க், களமிறங்கிய சில விநாடிகளில் கோல் அடித்து வரலாற்று சாதனை பதிவு செய்தார். இது உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிவேக மாற்று வீரர் கோலாகும்.கூடுதல் நேரத்தில் யாசின் அயாரு தனது இரண்டாவது கோலை அடித்து ஸ்வீடனின் வெற்றியை 5-1 என உறுதி செய்தார். இஷாக் ஒரு கோல் மற்றும் இரண்டு அசிஸ்ட்களுடன் சிறப்பாக விளையாடினார். கியோகெரஸ் ஒரு கோல் மற்றும் ஒரு அசிஸ்ட்டுடன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.இந்த வெற்றியால் ஸ்வீடன் அணி குழு சுற்றில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ள நிலையில், துனிசியா அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது