Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த ரூமேஷ் தரங்க: வரலாறு படைத்த முதல் இலங்கையர்

06 Aug 2026, 12:01 PM
பார்வைகள்: 1,800
உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த ரூமேஷ் தரங்க: வரலாறு படைத்த முதல் இலங்கையர்

 இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்க, ஆடவருக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

1,354 தரவரிசைப் புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் ஈட்டி எறிதல் வீரராக முன்னேறியுள்ள ரூமேஷ் தரங்க, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அண்மையில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றது, அவரது தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ரூமேஷ் தரங்கின் இந்த வரலாற்றுச் சாதனை, சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித்தந்துள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.