Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

நேபாள திடீர் வெள்ளத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலிய குடும்பம் மாயம்!

31 Aug 2026, 09:46 AM
பார்வைகள்: 242
நேபாள திடீர் வெள்ளத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலிய குடும்பம் மாயம்!

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் குடும்பமொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் வசித்து வந்த சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது இரு மகன்களான அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வருமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்பம் காணாமல் போனமை தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

குடும்பத்தினர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், உறவினர்கள் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.