Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

சூடானில் டிரோன் தாக்குதல்கள் தீவிரம்: ஐந்து மாதங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

16 Jun 2026, 10:38 AM
பார்வைகள்: 169
சூடானில் டிரோன் தாக்குதல்கள் தீவிரம்: ஐந்து மாதங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவு படைக்கும் (RSF) இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், டிரோன் தாக்குதல்களால் இந்த ஆண்டு முதல் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், 2023 ஏப்ரல் மாதம் தொடங்கிய மோதல் தற்போது மேலும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற டிரோன் தாக்குதல்களில் மட்டும் 1,000-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், சூடானின் மனிதாபிமான நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும் வோல்கர் டர்க் எச்சரித்தார்.