Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

01 Oct 2026, 10:26 AM
பார்வைகள்: 1,223
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லிட்டர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 478 ரூபாவாக இருந்த அதன் விலை தற்போது 528 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 382 ரூபாவிலிருந்து 392 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.