Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த 21 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

05 Oct 2026, 11:52 AM
பார்வைகள்: 1,113
புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த 21 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான கண்காணிப்பு அமைப்பான யுனைட்ஸ் (UNAIDS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த 21 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகளின்படி, 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான புதிய எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு தொடர்பில், எச்.ஐ.வி தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது என சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், எச்.ஐ.வி தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பரிசோதனை மற்றும் ஆரம்பகால சிகிச்சையை ஊக்குவிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.