Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

இலங்கை ‘A’ அணிக்கு எதிரான போட்டியில் மோதல்

16 Jun 2026, 02:09 PM
பார்வைகள்: 1,547
இலங்கை ‘A’ அணிக்கு எதிரான போட்டியில் மோதல்

தம்புள்ளவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கை ‘A’ அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக, இந்திய ‘A’ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போட்டி சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையில், இந்திய அணி 19 ரன்கள் இலக்கைத் துரத்தியபோது 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்ட முடிவில் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், சூர்யவன்ஷி இலங்கை வீரரைத் தள்ளியதாகவும், அதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சூழல் உருவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.முன்னதாக, போட்டியின் போது நோ-பால் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் இந்திய கேப்டன் திலக் வர்மா நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தபோது, சூர்யவன்ஷியும் களத்தில் நுழைந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பயிற்சியாளர் தலையிட்டு அவரை வெளியே அழைத்துச் சென்றார்.இந்த சம்பவங்கள் அனைத்தும் ஐசிசி நடத்தை விதிமுறை 2.12 கீழ் “உடல் ரீதியான மோதல் அல்லது தவறான நடத்தை” ஆக கருதப்படலாம் என்பதால், அபராதம் அல்லது தடை போன்ற ஒழுங்கு நடவடிக்கை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.