Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

2027 உலகக் கோப்பை: இந்திய அணியின் சாத்தியமான பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்கள்

18 Jun 2026, 02:55 PM
பார்வைகள்: 1,476
2027 உலகக் கோப்பை: இந்திய அணியின் சாத்தியமான பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்கள்

2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சாத்தியமான பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் இந்திய வீரர்களான மோஹித் சர்மா மற்றும் மனோஜ் திவாரி தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உலகக் கோப்பைக்கான அணிக் கட்டமைப்பு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

இரு முன்னாள் வீரர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான அணியையே தேர்வு செய்துள்ள நிலையில், விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷனுக்கு இருவரும் இடமளித்துள்ளனர். அதேவேளை, அக்சர் படேலுக்கு இருவரின் அணியிலும் இடம் கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சுப் பிரிவில் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முகமது சிராஜ் பட்டியலில் இடம்பெறவில்லை.சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வில் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது. மனோஜ் திவாரி குல்தீப் யாதவை அணியில் சேர்த்துள்ள நிலையில், மோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜாவை தனது தேர்வாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட மனோஜ் திவாரி, ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருந்தால் அணியில் இடம்பெறுவார் என்றும், அவர் இல்லாத பட்சத்தில் நிதிஷ் குமார் ரெட்டி மாற்று வீரராக கருதப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களுக்கு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக பயன் அளிப்பார்கள் என்பதால் குல்தீப் யாதவை தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.இதனிடையே, உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி இன்னும் 20-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால், இறுதி அணியில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முக்கிய ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொடர்கள் 2027 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.