Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளப் பயன்பாட்டில் கட்டுப்பாடு; ஐ.அ.இ. புதிய தீர்மானம்

18 Jun 2026, 04:19 PM
பார்வைகள்: 118
15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளப் பயன்பாட்டில் கட்டுப்பாடு; ஐ.அ.இ. புதிய தீர்மானம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயிக்கும் புதிய தீர்மானத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.புதிய விதிமுறைகளின்படி, 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களின் முழுமையான அம்சங்கள் மற்றும் சேவைகளை அவர்கள் அணுகுவதிலும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சமூக வலைத்தளங்களின் எதிர்மறை தாக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த புதிய நடைமுறை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களின் நலனை முன்னிறுத்தும் முக்கியமான கொள்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.