Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை பிக்கு அமெரிக்காவில் கைது

19 Jun 2026, 11:55 AM
பார்வைகள்: 250
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை பிக்கு அமெரிக்காவில் கைது

அமெரிக்காவின் Massachusetts மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பௌத்த மதகுருவாக பணியாற்றி வந்த 32 வயதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு Mahayaye Vineetha Thero பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.Boston காவல்துறையினர் மனிதக் கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழிலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுத்த “Operation Red Card” எனும் இரகசிய நடவடிக்கையின் போது அவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இணையத்தில் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட போலி விளம்பரத்துக்கு பதிலளித்த அவர், பாலியல் சேவைகளுக்காக 125 முதல் 400 அமெரிக்க டொலர்கள் வரை வழங்க முன்வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிக்கு, தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்ந்துவருகின்றன.