Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அமேசானை முந்தி உலகின் 5-வது பெரிய நிறுவனமாக உயர்ந்த ஸ்பேஸ் எக்ஸ்

19 Jun 2026, 12:21 PM
பார்வைகள்: 574
அமேசானை முந்தி உலகின் 5-வது பெரிய நிறுவனமாக உயர்ந்த ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், பங்குச் சந்தையில் அறிமுகமானதைத் தொடர்ந்து வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து, உலகின் 5-வது மிக மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 75 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை அறிவித்திருந்தது. ஒரு பங்கின் ஆரம்ப விலை 135 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வர்த்தகத் தொடக்கத்திலேயே அதன் பெறுமதி 21 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

இதன் விளைவாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் அமெரிக்க டொலரை எட்டியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் உருவெடுத்துள்ளது.அதேவேளை, செயற்கை நுண்ணறிவு துறையில் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், “கர்சர்” என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை 60 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கையகப்படுத்தவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அதன் பெரும்பான்மை பங்குதாரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், உலக வரலாற்றில் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் நபராக அவர் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.