Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

312 கி.மீ. வேகம்.. லம்போர்கினியின் புதிய சூப்பர் எஸ்யுவி!

06 Jul 2026, 11:26 AM
பார்வைகள்: 80
312 கி.மீ. வேகம்.. லம்போர்கினியின் புதிய சூப்பர் எஸ்யுவி!

இத்தாலியைச் சேர்ந்த பிரபல சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, உலகின் அதிவேக மற்றும் சக்திவாய்ந்த சூப்பர் எஸ்யுவி மாடலாக 'உருஸ் எஸ்இ பெர்ஃபார்மண்டே' (Urus SE Performante)-யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல், செயல்திறன், அதிவேகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கார் மணிக்கு 312 கிலோமீட்டர் வரை உச்ச வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், 0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 3.3 விநாடிகளிலும், 0 முதல் 200 கி.மீ. வேகத்தை 10.8 விநாடிகளிலும் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போதைய சூப்பர் எஸ்யுவி சந்தையில் உள்ள பல முன்னணி மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த ஹைபிரிட் பவர் டிரெயின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக செயல்திறனுடன் கார்பன் உமிழ்வையும் குறமேலும், வழக்கமான உருஸ் எஸ்இ மாடலைவிட இந்த கார் 32 கிலோ எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர், ரூஃப், போனெட் மற்றும் வீல் ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

புதிய 'AURA' டூயல்-சேம்பர் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. இது, அதிக வேகத்தில் வளைவுகளில் செல்லும்போது காரின் உடல் சாய்வை (Body Roll) 55 சதவீதம் வரை குறைத்து, நிலைத்தன்மையை மேமஅதேபோல், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள Strada, Sport, Corsa ஓட்டுநர் முறைகளுடன், கரடுமுரடான மற்றும் மணல் நிறைந்த சாலைகளில் சிறப்பாக இயக்குவதற்காக புதிய 'Rally' மோடும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த சூப்பர் எஸ்யுவியின் விலை சுமார் ₹4.85 கோடி எனக் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் வரும் சில மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது