Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

வாட்ஸ் அப்-இல் புதிய \'பச்சை புள்ளி\' அம்சம் சோதனை; ஆன்லைனில் இருப்பவர்களை எளிதில் அறிய வசதி

07 Jul 2026, 11:44 AM
பார்வைகள்: 70
வாட்ஸ் அப்-இல் புதிய \'பச்சை புள்ளி\' அம்சம் சோதனை; ஆன்லைனில் இருப்பவர்களை எளிதில் அறிய வசதி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில், பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய 'Green Dot' (பச்சை புள்ளி) அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சத்தின் மூலம், ஒரு பயனர் தற்போது ஆன்லைனில் இருந்தால், அவரது சுயவிவரப் படத்தின் (Display Picture) அருகில் சிறிய பச்சை நிற புள்ளி தோன்றும். இதன் மூலம், அந்த நபர் தற்போது வாட்ஸ் அப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை சாட் திறக்காமலேயே எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

தற்போது இந்த வசதி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iPhone) பீட்டா (Beta) பதிப்புகளை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் வாரங்களில் மேலும் பல பீட்டா பயனர்களுக்கும், அதன் பின்னர் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய 'Green Dot' அம்சம் பயனர்களின் தனியுரிமையை பாதிக்காது என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'Last Seen & Online' தனியுரிமை அமைப்புகளின் அடிப்படையிலேயே இந்த பச்சை புள்ளி காண்பிக்கப்படும். எனவே, தங்களது ஆன்லைன் நிலையை பிறரிடம் மறைத்துள்ள பயனர்களுக்கு இந்த பச்சை புள்ளி தோன்றாது.முதற்கட்டமாக இந்த பச்சை நிற குறியீடு தொடர்பு விவரங்கள் (Chat Info/Contact Info) பகுதியில் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. எதிர்கால புதுப்பிப்புகளில் சாட் பட்டியல் உள்ளிட்ட செயலியின் பிற பகுதிகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.