Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஈரானுடனான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது: டிரம்ப் அறிவிப்பால் பதற்றம் தீவிரம்

08 Jul 2026, 03:00 PM
பார்வைகள்: 69
ஈரானுடனான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது: டிரம்ப் அறிவிப்பால் பதற்றம் தீவிரம்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அமலில் இருந்த இடைக்கால போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கியில் உள்ள அங்காராவில் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றி முடிவடைந்ததையடுத்து, அந்த இடைக்கால ஒப்பந்தம் இனி தொடராது என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களும், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்து புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் "நேர விரயம்" எனக் குறிப்பிட்ட டிரம்ப், தற்போதைய சூழ்நிலையில் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்காலத்தில் இருதரப்பும் விரும்பினால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு முற்றிலும் மூடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.