Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

பெர்லினில் வீட்டு வாடகைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7% வரை உயர்வு

12 Jun 2026, 01:39 PM
பார்வைகள்: 231
பெர்லினில் வீட்டு வாடகைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7% வரை உயர்வு

ஜேர்மன் தலைநகரான பெர்லினில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு வாடகைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. புதிய தரவுகளின்படி, மின் கட்டணம் போன்ற பிற சேவைக் கட்டணங்களை தவிர்த்து, ஒரு சதுர மீட்டருக்கான வாடகை 6.9 சதவீதம் முதல் 7.71 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.வீட்டு வாடகைகள் வீட்டின் அளவு, அதன் அமைவிடம் மற்றும் கட்டிடத்தின் வகை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. இருப்பினும், முன்னர் குறைந்த வாடகை என கருதப்பட்ட பகுதிகளிலும் தற்போது குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 1973 முதல் 1990 வரை கட்டப்பட்ட prefab வகை குடியிருப்புகளில் வாடகை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த வகை வீடுகளின் வாடகை 49 சதவீதம் வரை அதிகரித்து, தற்போது சதுர மீட்டருக்கு சராசரியாக 9.65 யூரோவாக பதிவாகியுள்ளது.