Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்: பின்னணி என்ன?

08 Jul 2026, 03:07 PM
பார்வைகள்: 78
குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்: பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சமீபத்தில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானின் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. இதையடுத்து, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள குவைத் மற்றும் பஹ்ரைனில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான், இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி எனக் கூறியுள்ள நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களது வான்வழிப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. சில பகுதிகளில் வான்வழி எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்கா–ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தப் புரிந்துணர்வு நடைமுறையில் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மீண்டும் பதற்றமடைந்துள்ளதுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி சந்தைகளிலும் தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.