Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அரபிக்கடலில் மாயமான சரக்கு விமானம்: பலுசிஸ்தான் கடற்கரையில் சிதைந்த பாகங்கள் மீட்பு

09 Jul 2026, 11:17 AM
பார்வைகள்: 173
அரபிக்கடலில் மாயமான சரக்கு விமானம்: பலுசிஸ்தான் கடற்கரையில் சிதைந்த பாகங்கள் மீட்பு

அரபிக்கடலின் மீது பறந்துக் கொண்டிருந்தபோது ரேடார் தொடர்பை இழந்த கே2 ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 சரக்கு விமானத்தின் சிதைந்த பாகங்கள், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண கடற்கரையோரத்தில் மீட்கப்பட்டுள்ளன.ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற இந்த சரக்கு விமானத்தில் இரண்டு விமானிகள், இரண்டு பொறியாளர்கள் மற்றும் ஒரு பணியாளர் என மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். விமானம் ரேடார் தொடர்பை இழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கடற்படை, கடல்சார் பாதுகாப்பு முகமை மற்றும் மீட்புப் படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தேடுதல் பணியின் போது, ஓர்மாரா துறைமுகத்திற்கு தெற்கே அரபிக்கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும், விமானத்தில் இருந்த ஐந்து பேரின் நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விமானத்தின் கருப்புப் பெட்டிகளை (Black Box) கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழிநடத்தல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக விமானக் குழுவினர் கடைசியாக தகவல் தெரிவித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.