இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னணி கல்லூரி ஒன்றின் ஆசிரியரான சுந்தரலிங்கம் பிரதீப், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் பொதுத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது விருப்பு உறுப்பினராக 112,711 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இதன்படி, அவர் மக்களின் நேரடி தமிழர் தெரிவாக நாடாளுமன்றத்துக்கு செல்கிறார்.