சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பள விவகாரம் !

user 19-Nov-2024 இலங்கை 79 Views

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என  இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadheera) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இது தவிர, வருகை கொடுப்பனவாக நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி