தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்...

user 29-Oct-2025 இலங்கை 22 Views

பல ஆண்டுகளாக அச்சிடப்படாத சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக ஆட்பதிவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளில் 2006 முதல் 2010 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பிறந்த பாடசாலை மாணவர்களின் அடையாள அட்டைகளும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்று ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 பாடசாலை மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதாகவும், 2005 இல் பிறந்த குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

2006 இல் பிறந்த குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 2006 இல் பிறந்த குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணியை முடிக்க நம்புவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த 300,000க்கும் மேற்பட்ட வயது வந்தோருக்கான அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்து வருவதாகவும், அடையாள அட்டைகள் தபால் நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு தினமும் வருகை தரும் மக்களை கருத்திற்கொண்டு இந்த நாட்டின் குடிமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்பது தெளிவாகின்றது என்று தெரிவித்துள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி