யானை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த தாய் உயிர் தப்பிய 3 வயது குழந்தை...

user 05-Aug-2025 இலங்கை 109 Views

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சம்பவதினமான சனிக்கிழமை இரவு7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Post

பிரபலமான செய்தி