மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும்!

user 12-Dec-2024 இலங்கை 696 Views

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை நாம் இப்போது எடுத்துள்ளோம்.

அதன் பின்னர் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கட்டண திருத்ததை மேற்கொள்வோம்.
நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது இலங்கை மின்சாரசபையில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தில் பாரிய தொகை செலவிடப்பட்டிருந்தது.

எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பேணுவதற்கான நடவடிக்கைகளையே
மின்சாரசபை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம்.

மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். கடந்த அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணம் தொடர்பான தரவினை அடிப்படையாகக் கொண்டே நாம் அந்த கருத்தினை முன்வைத்தோம். மின்சாரசபை ஊழியர்களுக்கு எவ்வித விசேட கொடுப்பனவையும் தற்போது நாம் வழங்கவில்லை” இவ்வாறு அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி