பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை "இரக்கமற்ற தாக்குதலில்" குத்தி படுகொலை கொலை செய்த இலங்கை தமிழர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் கூறியுள்ளதாவது,
47 வயதான நிமலராஜா மதியபரணம், செஃப்டனில் உள்ள கடை ஒன்றில் பணி புரிந்த நிலானி நிமலராஜாவை (44) கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நிலானி தனது மகள்களுடன் கடைக்கு மேலே உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.
மதியபரணம், ஒரு குடும்ப நிகழ்வுக்கு அழைக்கப்படாததால் படு கோபமடைந்தார் என கூறப்படுகின்றது. இது அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி உள்ளது. கொலை நடந்த ஜூன் 20 அன்று - தாயை இழந்த மகள் தனது "உலகம் நின்றுவிட்டதாக" கூறினார், மேலும் தனது தந்தையால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது எனவும் கூறினார்.
கொலையாளிக்கு குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி, கொலை செய்யப்படவரின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களையும் நான்கு வெட்டுக் காயங்களையும் வைத்திய நிபுணர் அடையாளம் கண்டுள்ளதாகவும், மதியபரணம் "கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே" செயல்பட்டதாகவும்" கூறினார்.
நீதிபதி இந்தக் கொலையை "மிகவும் கொடூரமானது" என்று விவரித்தார், இது பாதிக்கப்பட்டவரை "உயர்ந்த அளவிலான மன மற்றும் உடல் ரீதியான துன்பத்திற்கு" ஆளாக்கியது எனவும் கூறினார்.
தாக்குதலுக்கு முன்பு, மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், அவரது நடத்தை ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. "உங்களை ஒரு குடும்ப நிகழ்வுக்கு அழைக்கவில்லை, ஆனால் இதை அறிந்ததும், நீங்கள் கோபமடைந்தீர்கள்," என்று நீதிபதி கூறினார். "பாதிக்கப்பட்டவர், எல்லா வகையிலும் ஒரு கனிவான மற்றும் முற்றிலும் ஒழுக்கமான பெண், தனது உயிருக்கு பயந்து, உங்களுடன் கடையில் சிக்கிக்கொண்டார்.
ஆயுள் தண்டனை
"பாதிக்கப்பட்டவர் எவ்வகையிலும் உயிர் பிழைக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய நீங்கள் உறுதியாக இருந்தீர்கள் என்பதை உங்கள் செயல்கள் காட்டுகின்றன." நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்டோர் அறிக்கையில், மதியபரணத்தின் மகள்களில் ஒருவர், தற்போது 18 வயது, கூறியதாவது , "அம்மாதான் எனக்கு எல்லாமே, நாங்கள் சிறந்த தோழிகள்.
இந்த கொலை நடந்த நாளில், என் அப்பா என் முதுகில் குத்தியதைப் போல உணர்ந்தேன். "நான் அதிர்ச்சியடைந்தேன், வார்த்தைகளை அறிய முடியாமல் தவித்தேன், என்ன செய்வது என்று தெரியவில்லை. என் உலகம் என்னைச் சுற்றியே நின்றுவிட்டது.
முன்பு சம்பவங்கள் நடந்திருந்தாலும், இது நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அந்த நாள் வரை என் அப்பாவை நேசிப்பதை நான் நிறுத்தவில்லை. "நான் என் அம்மா, அப்பா, என் வீடு மற்றும் என்னையே இழந்தேன்." அவர் மேலும் தொடர்ந்தார்.
என்னைப் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர வைத்தவர் இப்போது இல்லை. அவரை என்னிடம் இருந்து எடு சென்றவர் என் அப்பா - குறைந்தபட்சம் நான் துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்.
அப்பாக்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் நபர்களாக இருக்க வேண்டும், அதை அழிக்க மாட்டார்கள்." அம்மாவை இழந்தது "எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என்று அவர் கூறினார்,
மேலும் "நான் ஆலோசனை, ஆறுதல் மற்றும் ஆதரவுக்காகச் சென்ற நபர் அவர்தான். "அவள் எனக்குப் பள்ளிப் படிப்பை முடிக்கவும், என் எதிர்காலத்தைத் திட்டமிடவும், பாதுகாப்பாக உணரவும் உதவினாள். அவள் இல்லாதது எனக்கு ஒவ்வொரு நாளும் உணர வைக்கும் ஒன்று.
" புதன்கிழமை விசாரணையின் இரண்டாவது நாளில் பொதுவில் கொலை மற்றும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த குற்றத்தை மதியபரணம் ஒப்புக்கொண்டார்.
தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளத் தடை விதித்த தடை உத்தரவை மீறியதாகவும் அவர் முன்பு ஒப்புக்கொண்டார்.
குறைந்தபட்ச தண்டனைக் காலத்தை அனுபவிக்கும் வரை அவரை விடுதலை செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார் என்று நீதிபதி கம்மிங்ஸ் மதியபரணத்திடம் கூறியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.