தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் அழைத்துச் சென்று, அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு குறித்த நபர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நேரமாக சிறுமி வீட்டில் இல்லாத காரணத்தால் பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் குறித்த இடத்திலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதாகவும்,சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தொடர்ந்தும் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் பெயரை வெளிப்படுத்தி நடந்த விபரங்களை சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதன் பின்னர் நாவலப்பிட்டி காவல் நிலையத்தில்,சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கான நாவலப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட குறித்த சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.