கிளிநொச்சியில் ஐயர் ஒருவரை கடுமையாக தாக்கிய சந்தேக நபர்!

user 09-Jan-2025 இலங்கை 623 Views

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த குருக்கள் ஒருவரை நபரொருவர் கடுமையாக தாக்கியதில் ஐயர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது ஐயர் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பன அறுத்து வீசப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (07-01-2025) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் மீளாய்வு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஐயர் சென்ற போது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த ஐயர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐயர் மீது எதற்காக தாக்குதல் நடாத்தப்பட்டது என்பது தெளிவாக தெரியவர நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி