வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை(இடியுடன் கூடிய மழை)

user 28-Feb-2026 இலங்கை 68 Views

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனியுடனான வானிலை நிலவக்கூடும்.

நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் பொதுவாக சீரான வானிலை நிலவும். காற்று திசை மாறி வீசக்கூடும் என்பதுடன், மணித்தியாலத்திற்கு 20–30 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை மாற்றங்களை கவனத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி