இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் இன்றையதினம் (17.01.2025) நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam ) தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் (Trincomalee) நடைபெறவுள்ளது.
இதன்போது, கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.