நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (03) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.