அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் பாதிப்பு !

user 29-Jan-2025 இலங்கை 192 Views

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது வட கிழக்கில்  “காலநிலை மாற்றங்களினால் நெல் வயல்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு

ஏக்கருக்கு 40,000 தருவதாகக் கூறினாலும்,  8, 000 மாத்திரமே  வழங்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் நெல் அறுவடை தற்போது இடம்பெறுகின்ற நிலையில், தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கே எதிர்பார்ப்பதாகவும் சாணக்கியன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் இவ்வாறான மாவட்டப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  போதுமான நேரம் கிடைப்பதில்லை எனவும் இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி