நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் குரங்கு!

user 09-Feb-2025 இலங்கை 471 Views

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

Related Post

பிரபலமான செய்தி